உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் படைத்தார்.
நேற்று முந்தினம் (14) இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தையும் சேர்த்து வில்லியம்சன் 2 சதம் உள்பட 578 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார்.
இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் இலங்கையின் தலைவனாக இருந்த மஹேல ஜெயவர்த்தன 548 ஓட்டங்கள் எடுத்ததே இந்த வகையில் சிறந்ததாக இருந்தது. அவரை வில்லியம்சன் முந்தி இருக்கிறார்.
மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-
* இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்காக ஒரு உலக கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் இயான் போத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்த மூத்த பவுலர் இவர் தான். பிளங்கெட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 99 நாட்கள்.
* நேற்று முந்தினம் (14) இடம்பெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து விக்கெட் காப்பாளர் டாம் லாதம் 2 கேட்ச் செய்தார். இந்த உலக கிண்ணத்தில் கேட்ச், ஸ்டம்பிங் செய்த வகையில் மொத்தம் 21 பேரை அவர் போட்டி இழக்கச் செய்திருக்கிறார். இதன் மூலம் 2003 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் அதிக பேரை விக்கெட் காப்பாளர் மூலம் வெளியேற்றிய அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டின் (21 அவுட்) சாதனையை சமன் செய்தார்.
>AD
(Date: 16.07.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.