இங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (11) நடைபெறும் 2 வது அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி லீக் போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2 வது இடம் பிடித்தது.
அவுஸ்திரேலிய அணி இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் சேசிங் செய்கையில் தோல்வியை சந்தித்தது. மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
5 முறை சாம்பியனான அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் எழுச்சி கண்டுள்ளது.
பயிற்சி மற்றும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் அவுஸ்திரேலிய அணி 8 வது முறையாக இறுதிசுற்றை அடைவதற்கு எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்கும்.
அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பழிதீர்த்து 4 வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும்.
இங்கிலாந்து கடைசியாக 1992 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பர்மிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு 2 வது அரைஇறுதி போட்டி நடைபெறும்.
>AD
(Date: 11.07.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.