×

Error

There was a problem loading image nails_201-270x170.jpg

ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படலாம்

7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இநத் சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஐ.பி.எல். உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போட்டிகளை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் கூறியதாவது:

 இந்தியாவில்  ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக போட்டி நடைபெறும் காலகட்டத்தில்  பாதுகாப்பு பிரச்சினை எழுந்தால் தென் ஆப்ரிக்காவில் போட்டியை நடத்தும் திட்டம் உள்ளது என்றனர்

மேலும்  இந்தியாவில் போட்டியை நடத்துவது குறித்து மத்திய அரசு அதிகாரிளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றனர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 2009ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

World Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி

இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்!

மழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ

புதிய தொகுப்புகள்