World Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் இடை நிறுத்தப்பட்டது.

பின்னர் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி இன்று நடைபெற்றது. மீதமிருந்த 3.5 ஓவர்கள் பந்து வீசப்பட்டது.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக ரோஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் புவனேஷ் குமார் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர்.

2 ஆவது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3 ஆவது பந்தில் ரோகித் சர்மா 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 3 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 4 ஆவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார்.

மூன்று பேரும் தலா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

பின்னர் அணிக்காக ஒன்று சேர்ந்த ரிஷாப் பேண்ட் மற்றும் ஹர்திக் பாண்டிய அணிக்காக நிதானமாக விளையாடி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.

தொடர்ந்த விளையாடிய இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இந்தியா அணி 18 ஓட்டங்களால் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்ப்பில் ரவீந்திர ஜடோஜா 77 ஓட்டங்களையும் டோனி 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹென்றி 3 விக்கெட்களையும் பேல்ட், பேர்கசன் மற்றும் சன்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

>AD

(Date: 10.07.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

World Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

World Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...

1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்

Also Viewed !

புதிய தொகுப்புகள்