விராட் கோலி துடுப்பாட்டத்தில் தொடர்ந்தும் முதலிடம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 891 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். உலகக் கிண்ணத்தில் ஐந்து சதங்கள் விளாசியதால் 885 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் 6 புள்ளிகளே வித்தியாசம் உள்ளன.

3-வது இடத்தில் பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர் பாபர் ஆசம் 827 புள்ளிகள் பெற்றுள்ளார். டு பிளிசிஸ் 820 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக் கிண்ணத்தில் சொதப்பிய நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர் ராஸ் டெய்லர் 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் மூன்று சதங்கள் அடித்துள்ள டேவிட் வார்னர் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் 7-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 8-வது இடத்திலும், குயிண்டான் டி கான் 9-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 10-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா 814 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். டிரென்ட் போல்ட் 2-வது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 3-வது இடத்திலும், ரபாடா 4-வது இடத்திலும், இம்ரான் தாஹிர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

>AD

(Date: 09.07.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்!

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்

வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்!

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவ

Also Viewed !

புதிய தொகுப்புகள்