இலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி வீரர் மெத்திவ்ஸ் 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இது மெத்திவ்ஸ் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட மூன்றாவது சதமாகும்.

மற்றும் லஹிரு திரிமன்ன 53 ஓட்டங்களையும் தனஞ்சய சில்வா 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்று வெற்றிகொண்டது.

அந்த அணி சார்பாக ராகுல் 111 ஓட்டங்களையும் ரோகித் சர்மா 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

>AD

(Date: 06.07.2019)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

World Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

World Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட

Also Viewed !

புதிய தொகுப்புகள்