உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
அதன் அடிப்படையில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்ப்பாக அவிஷ்க பெர்ணான்டோ 104 ஓட்டங்களையும், குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் நிக்கலஸ் பூரான் 118 ஓட்டங்களையும் பெபியன் அல்லன் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் லசித் மாலிங்க 3 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அதன் அடிப்படையில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
>AD
(Date: 01.07.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.