சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணிக்கு ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் பாடம் புகட்ட இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இங்கிலாந்தில் நடந்த கடந்த தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அணி துடிப்புடன் செயல்படுகிறது.
அதற்கேற்ப பிரிஸ்பேன் கபா மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே உற்சாகத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறும் முனைப்பில் அந்த அணி உள்ளது. மிச்செல் ஜான்சன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து, அடிலெய்டில் டிசம்பர் 5ம் திகதி தொடங்கும் 2வது டெஸ்டில் எழுச்சி பெறக் காத்திருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்தின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரஹாம் கூச் கூறுகையில், வார்த்தைப் போரையும் ஆட்டத்தின் ஒரு அங்கமாகக் கருதி சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காயத்தில் இருந்து குணமடைந்த டிம் பிரஸ்னென் அடிலெய்டு டெஸ்டில் களமிறங்க உள்ளார்.