பாக்கிஸ்தானுடனான தொடர் இலங்கைக்கு சவாலாக அமையும்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கிரஹம் போட் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு ராச்சியத்தை பொறுத்தவரையில் பாகிஸ்தானிய அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் உள்ளது. அத்துடன் கடந்த 6 மாதங்களாக அந்த அணி ஐக்கிய அரபு ராச்சியத்தில் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்று வருவதால் அந்த அணிக்கு அங்குள்ள மைதானங்கள் பரிட்சியமாக இருக்கலாம் என்றும் இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு 20 க்கு 20 போட்டிகள், ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ளன.

You may also like ...

ஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்ப

இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

இலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்

புதிய தொகுப்புகள்