Language :     Englishதமிழ்

மெஸ்சியின் கனவு நிஜமாகுமா?

அர்ஜென்டினாவின் முன்னணி காற்பந்து வீரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்து ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்தற்காக மெஸ்சிக்கு தங்க காலணி பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் காற்பந்து உலக கிண்ணம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட மெர்ஸி,

அடுத்த வருடம் பிரேசிலில் நடக்கும் உலகக்கோப்பை காற்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ் அல்லது அர்ஜென்டினா அணிகள் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

“கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட காயம் வரும் ஜனவரி மாத்திற்குள் குணமாகிவிடும் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியில் எனது ஆட்டம் பற்றி கேள்வி எழுப்பி சில ரசிகர்கள் குறைகூறுவது வேதனை அளிக்கிறது. அவர்கள் என்னை விரும்பவில்லை” என்றும் மெஸ்சி கூறினார்.

புதிய தொகுப்புகள்