தொடரை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

கன்பூரில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் 264 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 தசம் ஒர் ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 266 ஒட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷீக்கர் தவான் 95 பந்துகளில் 119 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரவி ராம்போல் மற்றும் டுவைய்ன் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது,.

மார்லன் சாமுவேல்ஸ் 71 ஓட்டங்களையும் கீரன் பவல் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி அஹமட், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்

போட்டியின் சிறப்பாட்டகாரராக ஷீக்கர் தவானும், தொடரின் சிறப்பாட்டகாரராக விராட் கோலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

You may also like ...

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை!

365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி

மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு!

IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி

Also Viewed !

புதிய தொகுப்புகள்