இங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகிக்கொண்டார்

ஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோனதன் டிராட் அதிரடியாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் போட்டித் தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிக மோசமான தோல்வியை தழுவியது. இதில் ஜோனதான் டிராட் 10, 09 ஆகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

'டிராட் ஆட்டமிழந்த விதம் மிகவும் மோசமானது. இது அவரது பலவீனத்தையே காட்டுகிறது' என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இங்கிலாந்து கேப்டன் கூக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜோனதன் டிராட் உடனடியாக நாடு திரும்புகிறார்.

''கடந்த காலங்கள் போல் நான் செயற்படவில்லை. 100 சதவீதம் தகுதியுடன் இல்லை என தெரிந்திருந்தும் நான் விளையாடி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கிரிக்கெட்டிலிருது விலகி இருப்பது இந்நேரம் முக்கியமானது. இம்மன நோயிலிருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்துவேன். எனது அணியினருக்கு வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிறந்த வீரரான டிராட் விலகியுள்ளது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. "இவ்வாறு தொடரின் இடையில் விலகுவதாக அறிவிப்பது, ஒரு சிறந்த வீரருக்கு அழகல்ல" என்று இங்கிலாந்து அணித்தலைவர் குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You may also like ...

உலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது!

இலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர

புதிய தொகுப்புகள்