இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Date: 28.04.2019)

You may also like ...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக

இந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி!

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்

புதிய தொகுப்புகள்