IPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. குருணாள் பாண்டியா 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ஓட்டங்களும் தவான் 35 ஓட்டங்களும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

(Date: 19.04.2019)

You may also like ...

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப

புதிய தொகுப்புகள்