IPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது .

துடுப்பாட்டத்தில் கிறிஸ் கைய்ல் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் சஹல் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 19 தசம் 2 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விராட் கோலி 67 ஓட்டங்களை பெற்றதுடன் சிறப்பாக ஆடிய ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றார்.

(Date: 14.04.2019)

You may also like ...

மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு!

IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி

IPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற

புதிய தொகுப்புகள்