×

Error

There was a problem loading image Honey-270x170.jpg

ஷில்லிங்போர்டு, சாமுவேல்ஸ் பந்துவீச்சு முறையில் சிக்கல்

வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர்கள் ஷேன் ஷில்லிங்போர்டு, மார்லன் சாமுவேல்ஸ் இருவரின் பந்துவீச்சும் முறையாக இல்லை என்று ஐசிசியிடம் நடுவர்கள் புகார் செய்துள்ளனர்.இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை

விவரம்:இந்தியாவுடன் மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில், கள நடுவர்கள் ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிகெல் லாங், டிவி நடுவர் வினீத் குல்கர்ன், ஐசிசி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஷேன் ஷில்லிங்போர்டு மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் இருவரின் பந்துவீச்சும் சந்தேகத்துக்குரிய வகையில் உள்ளதாக புகார் செய்துள்ளனர்.இதற்கான ஆவணங்களின் நகலை வெஸ்ட் இண்டீஸ் அணி மேலாளரிடம் ஐசிசி போட்டி நடுவர் பைகிராப்ட் வழங்கியுள்ளார். அந்த புகாரில் சாமுவேல்ஸ் வேகமாக வீசும் பந்துகள் மற்றும் ஷில்லிங்போர்டின் தூஸ்ரா வகை பந்துவீச்சு முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

ஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி?

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச

புதிய தொகுப்புகள்