IPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வார்னர் (100*), பேர்ஸ்டோவ் (114) ஆகியோரின் சதங்களால் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 232 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது.

பார்தீவ் பட்டேல், ஹெட்மையர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 வது ஓவரை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பார்தீவ் பட்டேல் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

4 வது ஓவரின் முதல் பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹெட்மையர் ஸ்டம்பிங் ஆனார். இதே ஓவரின் 4 வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் 1 ஓட்டம் எடுத்த நிலையில் க்ளீன் ஆட்டம் இழந்தார். ஐந்து பந்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சாயத்தார் முகமது நபி.

மெகா இலக்கை நோக்கிச் செல்லும்போது நான்கு ஓவர்களுக்குள்ளேயே 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடம் புரண்டது ஆர்சிபி. 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விராட் கோலி சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

கொலின் டி கிராண்ட்ஹோம் 37 ஓட்டங்களும், பிரயாஸ் பர்மன் 19 ஓட்டங்களும் அடிக்க 113 ஓட்டங்களுக்கும் சுருண்டது. ஆர்சிபி. இதனால் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

முகமது நபி 4 ஓவரில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் அள்ளினார். சந்தீப் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

(Date: 01.04.2019)

You may also like ...

World cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப

World cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி

புதிய தொகுப்புகள்