×

Error

There was a problem loading image untitled-270x170.jpg

IPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி!

8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7 வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.

கடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்க இந்த சீசனில் ஒரு வீரராக மும்பை அணிக்கு திரும்பினார்.

நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ஓட்டங்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 188 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.

கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ஓட்டங்கள்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதை அடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20 வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ஓட்டம் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்க தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

(Date: 29.03.2019)



பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

டிவில்லியர்ஸ் 70 ஓட்டங்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

2 வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2 வது தோல்வி இதுவாகும்.

You may also like ...

IPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண

IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு

Also Viewed !

புதிய தொகுப்புகள்