Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image muthuku.jpg

IPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 2 வது வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது கொல்கத்தா அணி பெற்ற 2 வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி தலைவர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: இந்தப் போட்டியின் தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரானாவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல உத்தப்பாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயத்தில் இருந்து குணமடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணி தலைவர் அஸ்வின் கூறியதாவது: நோபாலால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிறிய தவறுகள் ஆட்டத்தை மாற்றி விடும். 219 ஓட்டங்கள் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி ஏற்பட்டது. பேட்டிங்தான் ஆட்டத்துக்கு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

(Date: 28.03.2019)

You may also like ...

முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ!

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத

உலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த

புதிய தொகுப்புகள்