பாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!

பாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு விக்கெட்களும் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டபோதிலும் ஏரொன் பிஞ்ச் 90 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தார்.

கிளென் மெக்ஸ்வெல் 71 ஓட்டங்களையும் பீற்றர் ஹேன்ஸ்கொம்ப் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

267 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 44.4 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், இமாட் வசிம் 43 ஓட்டங்களை குவித்தார்.

5 வீரர்கள் 5 க்கும் குறைவான ஓட்டங்களையே பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் அடம் ஸம்பா 4 விக்கெட்களையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளையும் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

(Date: 28.03.2019)

You may also like ...

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி!

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்

புதிய தொகுப்புகள்