×

Error

There was a problem loading image windowless-plane03.gif

மே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்?

12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி (சனிக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. கடந்த ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதி வரை இரண்டு வார காலத்துக்கு மட்டுமே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் ´லீக்´ அட்டவணைகளின் முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மே 5 ஆம் திகதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

பிளே ஆப் சுற்று போட்டி நடைபெறும் திகதி, இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19 ஆம் திகதி வரை நடக்கிறது. இதை பாதிக்காத வகையில் ஐ.பி.எல். அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா அணிகளும் தங்களது சொந்த மண்ணில் 7 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனால் கொல்கத்தா நைட்ரைடரில் ஈடன்கார்டன் மைதானத்தில் மோதும் ஆட்டங்கள் அதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது.

‘பிளே ஆப்’ சுற்று ஆட்டங்கள் விவரம் அறிவிக்கப்படாவிட்டாலும் இறுதிப் போட்டி சென்னையில் மே 12 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிகிறது. நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

பிளேஆப் சுற்றில் ‘குவாலிபையர்-1’ ஆட்டம் மே 7 ஆம் திகதியும், ‘எலிமினேட்டர்’ மே 8 ஆம் திகதியும், ‘குவாலிபையர்-2’ மே 10 ஆம் திகதியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். ஆட்டங்களில் ஏதாவது நகரங்களில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் மாற்று இடமாக விசாகப்பட்டினத்தை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

(Date: 22.03.2019)

You may also like ...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு

World Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

புதிய தொகுப்புகள்