இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்!

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் சற்று முன்னர் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா 5 - 0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Date: 19.03.2019)

You may also like ...

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி

புதிய தொகுப்புகள்