Language :     Englishதமிழ்

மழையால் ஆட்டம் ரத்து

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மில்ஸ், "பீல்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு முதல் பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மில்ஸ் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் திமுத் கருணாரத்னே "டக்-அவுட் ஆனார். பின் இணைந்த தில்ஷன் (81), சங்ககரா (79) ஜோடி பொறுப்பாக ஆடியது. மகிளா ஜெயவர்தனா (1) ஏமாற்றினார். திரிமன்னே (2), சண்டிமால் (9), குலசேகரா (12), மலிங்கா (0), செனநாயகே (14) சொற்ப ரன்னில் வெளியேறினர். கேப்டன் மாத்யூஸ் (74*) கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் மில்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தேவ்சிச் (0), மலிங்காவின் முதல் ஓவரில் போல்டானார். நியூசிலாந்து அணி 4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது போது மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. லதாம் (4), நிகோல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மழை நீடித்தால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 0-0 என சமநிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நாளை நடக்கவுள்ளது.

You may also like ...

வடகொரியா தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது

கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொ

ஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதீவுகளுக

புதிய தொகுப்புகள்