இலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குஷல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், பிரியமால் பெரேரா 33 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு 226 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(Date: 16.03.2019)

You may also like ...

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி

உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்!

உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை

புதிய தொகுப்புகள்