சச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்

சச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி.இதை காரணமாக வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு சூதாட்டம் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சச்சின் விளையாடிய 199வது டெஸ்ட் மேட்சில் மேற்கிந்திய தீவு அணியுடன்  டெஸ்ட் போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சச்சினுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

முன்னாள்  இந்திய அணி கேப்டன் கங்குலி சச்சினுக்கு பொன்  மணி மகுடம் சூட்டி கட்டித்தழுவி கொண்டார். ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி சச்சினுக்கு மரியாதை செய்தனர்.

இந்நிலையில், சச்சின் எதிர்கொள்ளும் 200வது டெஸ்ட் போட்டியும்,அவரது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி போட்டியுமான மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சச்சின் பிறந்த மண்ணான மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வெகு ஆவலுடன்  எதிர்பார்க்க வைத்துள்ள  நிலையில்,இதை காரணமாக வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், அது 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளது என்றும் உளவுத்துறை தகவல் அளித்து உள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன.

You may also like ...

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார

புதிய தொகுப்புகள்