மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது.

இதில் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் (சீனா) நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் இடம் பெறுவது 50 ஓவர் போட்டியா? அல்லது 20 ஓவர் வடிவிலான போட்டியா? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவை வரவேற்றுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, "2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு அணிகளை அனுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்துவோம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணியால் பதக்கம் வெல்ல முடியும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்றார்.

You may also like ...

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்

100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...

கிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு

புதிய தொகுப்புகள்