இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
அதன்படி தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணி சார்பாக திக்ெவல்ல 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.