இலங்கைக்கெதிராக தென்னாபிரிக்கா 222 ஓட்டங்கள்!

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டும், ராஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இதுவரையில் 7 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

இலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்

இலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது

புதிய தொகுப்புகள்