இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜய பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின்போது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் சர்வதேச போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.
மேலும் அவர் தனது பந்து வீச்சு முறையை மாற்றி நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவரது பந்து வீச்சு சென்னையில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் அறிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) கொடுக்கப்பட்டது.
இதனை ஆய்வு செய்த ஐ.சி.சி, அகில தனஞ்ஜய சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அனுமதி அளித்துள்ளது.