இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 259 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது தென்ஆப்பிரிக்க அணி.
தென்னாபிரிக்க அணி சார்பாக பெப்டு பிளசிஸ் 90 ஓட்டங்களையும், கொக் 55 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
டர்பனில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி 59.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், ராஜித 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.