ஆஸ்திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழபுக்கு 304 ஓட்டங்களை எடுத்தது. கேப்டன் பெய்லி அதிரடியாக 85 ஓட்டங்களையும், ஃபிஞ்ச் 72 ஓட்டங்களையும் எடுத்தனர். மெக்ஸ்வெல் 23 பந்துகளில் 3 சிக்ஸர் அடங்களாக 31 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் அஷ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே ஷேகர் தவானை 7 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. ரோஹித் ஷர்மா - விராத் கோலி இணைந்து இணைப்பாட்டத்தை ஓரளவு உயர்த்தினர். எனினும் ரோஹித் சர்மா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விராத் கோலி 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரைனா 39 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி ஆகியோர் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய அஷ்வின், ஜடேஜா ஆகியோரும் விரைவில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 49.4 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் பௌல்க்னர் 3 விக்கெட்டுக்களையும், மெக்கேய், வட்சன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். போட்டி நாயகனாக ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி தெரிவானார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. பரிசளிப்பு நிகழ்வின் போது பார்ட்னர்ஷிப் பில்டப் செய்ய முடியாதது தோல்விக்கு காரணம் என்றார் தோனி. சகல வீரர்களதும், இணைப்பாட்டமே வெற்றிக்கு காரணம் என்றார் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி.

இத்தொடரில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தால், ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இருக்கும் நம்.1 இடத்தை இந்தியா இழக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜெய்ப்பூரில் அக்.16 நடைபெறுகிறது.

You may also like ...

இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்!

மழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ

World Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட

புதிய தொகுப்புகள்