அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன அரை சதம் அடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களை பெற்று போட்டியை இடை நிறுத்தி இருந்தது.
அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.