சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை

இந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக வலம் வந்த சச்சின் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் டிராவிட் அளித்த பேட்டி: சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் சச்சின். அவரை பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்தவர்கள் ஏராளம். சச்சின் ஓய்வு பெறுவது இளைஞர்களுக்கு இழப்பு தான். இனி இளைஞர்களுக்கு உத்வேகம் கிடைக்காது என்பது கசப்பான உண்மை.

அடுத்த தலைமுறை வீரர்கள் சச்சினுடன் டிரஸ்சிங் அறையை பகிர்ந்துகொள்ளும் அனுபவத்தை இழப்பார்கள். நீண்ட வருடங்களாக இளம் வீரர்களுக்கும், குழந்தைகளுக்கும் உத்வேகமாகவும், ரோல் மாடலாகவும் சச்சின் இருந்துள்ளார். அவரது ஓய்வை ஈடுசெய்ய நீண்ட காலம் ஆகும். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள சச்சினின் 200வது டெஸ்ட் அவருக்கு சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன்.

நாட்டுக்காக 24 ஆண்டுகள் முழுமையாக விளையாடிய அவர் சொந்த ஊரில் மக்கள் முன்னாள் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவது மிகவும் பாக்கியமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like ...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜப்பானிய பேரரசர்!

இன்றுடன் (30ஆம் திகதி) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ

Also Viewed !

புதிய தொகுப்புகள்