கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவு ரீ-20 கிரிக்கட் சுற்றுப்போட்டி

கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி 24 கழகங்கள் கலந்துகொள்ளும் ரீ-20 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிகிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப்போட்டியின் ஆரம்ப விழாவிற்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

முதலாவது ஆரம்ப போட்டியில் கல்முனை ஜிம்ஹானா அணியை எதிர்த்து கல்முனை டொப் ஹீரோஸ் அணி மோதியது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை டொப் ஹீரோஸ் அணியினர் களத்தடுப்பை தெரிவு செய்ததற்கிணங்க கல்முனை ஜிம்கானா அணி முதலில் துடுப்பெடுத்தாடினர். இதற்கிணங்க 19 ஓவர்கள் முடிவில் 135 ஓட்டங்களை ஜிம்கானா அணியினர் பெற்றுக்கொண்டனர். இவ்வணியின் சார்பாக எம். இர்ஷாத் 24 ஓட்டங்களையூம், எம்.எம். றியாஸ் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப் ஹிரோஸ் அணியினர் 13.5 ஓவர்களில் சகல விக்கட்கெட்டுக்களையும் இழந்து 78 ஓட்டங்களைப்பெற்றனர். இவ்வணியின் சார்பில் ஏ.எம். அஸ்மீர் 21 ஓட்டங்களையுகம், வை. இர்ஷாத் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜிம்கானா அணியைச்சேர்ந்த எம்.எம். றியாஸ் தெரிவாகி பிரதம அதிதியால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். கல்முனை பிரதேசத்தில் பத்திரிகை விநியோகஸ்தரான ஹனிபா ஹோட்டலின் இணை அனுசரணையுடன் இச்சுற்றுப்போட்டி இடம் பெறுகின்றது .

வெற்றி பெறும் கழகங்களுக்கு முதலாவது பரிசாக 15000 ரொக்கப் பணமும் கேடயமும், இரண்டாவது பரிசாக 10000 ரொக்கப் பணமும் கேடயமும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.எம். லாபீர் தெரிவித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

You may also like ...

இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை!

சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4

லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச

புதிய தொகுப்புகள்