Language :     Englishதமிழ்

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ராஜஸ்தான்

சென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் ஜெய்ப்பூரில் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ரன்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது. ராஹேன் அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும் வட்சன் 32 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 145 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. அஷ்வின் அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை போராடினார். எனினும் சென்னையின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையடுத்து சென்னையின் சாம்பியன்ஸ் கோப்பைக் கனவு மறுமுறை தோல்வியில் முடிந்துள்ளது. நாளை மும்பை - ட்ரினிடாட் அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ராஜஸ்தானுடன் மோதவுள்ளது.

You may also like ...

ஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்ப

World Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

Also Viewed !

புதிய தொகுப்புகள்