×

Error

There was a problem loading image News+Hunt.png

சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது

மும்பை - பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையில் டெல்லியில் நேற்று இடம்பெற்ற டுவெண்டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது. வைட்மான் 51 ஓட்டங்களையும், ஆகர் 35 ஒட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் குட்லெர் நைல் 3 விக்கெட்டுக்களையும், ஓஜா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு களமீறங்கிய மும்பை அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியை இலகுவாக பெற்றது. ரோஹித் ஷர்மா அதிரடியாக 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும், ஸ்மித் 25 பந்துகளில் 48 ஓட்டங்களையும் எடுத்தனர். டெண்டுல்கர் எந்தவொரு ஓட்டமும் எடுக்காத நிலையில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

 மறுமுனையில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ட்ரினிடாட் டொபாகோ அணிகளுக்கு இடையில் டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி ட்ரினிடாட் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் ட்ரினிடாட் அணி அரையிறுதிக்கு நுழைந்ததுடன், இம்முறை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ள ஒரே ஒரு வெளிநாட்டு லீக் அணியாகவும் பெருமை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை எடுத்தது. சுரேஷ் ரைனா மாத்திரம் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் எம்ரித் 3 விக்கெட்டுக்களையும், சைமன்ஸ், ராம்போல் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ட்ரினிடாட் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 15.1 ஓவர்களில் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது. ஆரம்ப வீரராக களமிரங்கிய சைமன்ஸ் அதிரடியாக 41 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்தார். இதில் 5 பவுன்றிகள், 6 சிக்ஸர் அடங்கும்.

பந்துவீச்சில் அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் சுரேஷ் ரைனா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். சாம்பியன்ஸ் லீக்கின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் அக்04ம் திகதி (நாளை) ராஜஸ்தான் ரோயல்ஸ் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து

புதிய தொகுப்புகள்