Language :     Englishதமிழ்

ராயல்ஸ் அணி ஏ பிரிவில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில்

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகோ அணியை வீழ்த்தியது.இதனால், இந்த சீசனில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஒடாகோ அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், உள்ளூரில் ராஜஸ்தான் பெற்ற தொடர் வெற்றிகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெற்றியின்மூலம், ராயல்ஸ் அணி ஏ பிரிவில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதனால், தனது அரையிறுதிப் போட்டியையும் உள்ளூரிலேயே விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

21 ரன்களுக்கு 4 விக்கெட்: பின்னர் ஒடாகோ வீரர்கள் பேட் செய்யத் தொடங்கினர். ராயல்ஸ் கேப்டன் திராவிட் யூகித்ததுபோல், தொடக்கத்திலேயே ஒடாகோ வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

ராஜீவ் சுக்லாவின் பந்து வீச்சில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்பினர். புரூம் (11 ரன்கள்), ரூதர்ஃபோர்டு (5), மெக்கல்லம் (0), புரூடர்(0) ஆகிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். இதனால், அந்த அணி 4.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், ஓரளவு அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக ஆடி வந்த தஸ்சாட்டே 26 ரன்களிலும், நீஷாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நாதன் மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஒடாகோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.

சுக்லா அபாரம்: ராயல்ஸ் தரப்பில் ராஜீவ் சுக்லா 4 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்களை மட்டும் அளித்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில், மெக்கல்லம், புரூடர் ஆகியோரை, தங்களது ரன் கணக்கை தொடங்கும் முன்னே சுக்லா வெளியேற்றினார்.

கூப்பர் 2 விக்கெட்டுகளையும், வாட்சன் மற்றும் தாம்பே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ராயல்ஸ் வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறிய ஒடாகோ, இந்த ஆட்டத்தில் 3 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

தடுமாற்றம்: குறைவான இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்று எண்ணி களமிறங்கினர் ராயல்ஸ் வீரர்கள். ஆனால், கேப்டன் திராவிட் 10 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அவர் அடிந்த பந்தை ஒடாகோ வீரர் பியர்டு அபாரமாக கேட்ச் செய்தார்.

திராவிட்டைத் தொடர்ந்து சம்சன் (5), வாட்சன் (2), பின்னி (1) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினார்.

ரஹானே நிதானம்: இதனிடையே, தொடக்க வீரராகக் களமிறங்கிய இளம் வீரர் அஜிங்யா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. 12.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற நிலையில் ராயல்ஸ் இருந்தது. பின்னர் களமிறங்கிய ஹோட்ஜ் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்.

ஹோட்ஜ் விளாசல்: சிறப்பாக ஆடி வந்த ரஹானே 44 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் கண்டார். ஆனால், 52 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை ஒடாகோ பந்து வீச்சாளர் நீஷாம் வெளியேற்றினார்.

இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்த ஹோட்ஜ், அதிரடியாக விளையாடினார். இதனால், வெற்றியை நோக்கி ராயல்ஸ் பயணித்தது. இறுதியில் 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காத ஹோட்ஜ் 52 ரன்கள் எடுத்தார். 23 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். ஒடாகோ தரப்பில் நீஷாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ராயல்ஸ் வீரர் ராஜீவ் சுக்லா பெற்றார்.

மும்பைக்கு வாய்ப்பு: புள்ளிகள் பட்டியலில் ஒடாகோ அணி 10 புள்ளிகளைப் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை அணி 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

ஒடாகோ அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் மும்பை அணியின் அரையிறுதிக் கனவு முற்றிலும் கலைந்திருக்கும். ஆனால், இந்த ஆட்டத்தின் முடிவு, மும்பையின் அரையிறுதிக் கனவை உயிர்ப்பித்தது.

புதன்கிழமை நடைபெறும் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டும், அந்த அணியின் அரையிறுதிக் கனவு மெய்யாகும்.சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகோ அணியை வீழ்த்தியது.

இதனால், இந்த சீசனில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஒடாகோ அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், உள்ளூரில் ராஜஸ்தான் பெற்ற தொடர் வெற்றிகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெற்றியின்மூலம், ராயல்ஸ் அணி ஏ பிரிவில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதனால், தனது அரையிறுதிப் போட்டியையும் உள்ளூரிலேயே விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

21 ரன்களுக்கு 4 விக்கெட்: பின்னர் ஒடாகோ வீரர்கள் பேட் செய்யத் தொடங்கினர். ராயல்ஸ் கேப்டன் திராவிட் யூகித்ததுபோல், தொடக்கத்திலேயே ஒடாகோ வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

ராஜீவ் சுக்லாவின் பந்து வீச்சில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்பினர். புரூம் (11 ரன்கள்), ரூதர்ஃபோர்டு (5), மெக்கல்லம் (0), புரூடர்(0) ஆகிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். இதனால், அந்த அணி 4.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், ஓரளவு அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக ஆடி வந்த தஸ்சாட்டே 26 ரன்களிலும், நீஷாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நாதன் மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஒடாகோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.

சுக்லா அபாரம்: ராயல்ஸ் தரப்பில் ராஜீவ் சுக்லா 4 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்களை மட்டும் அளித்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில், மெக்கல்லம், புரூடர் ஆகியோரை, தங்களது ரன் கணக்கை தொடங்கும் முன்னே சுக்லா வெளியேற்றினார்.

கூப்பர் 2 விக்கெட்டுகளையும், வாட்சன் மற்றும் தாம்பே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ராயல்ஸ் வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறிய ஒடாகோ, இந்த ஆட்டத்தில் 3 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

தடுமாற்றம்: குறைவான இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்று எண்ணி களமிறங்கினர் ராயல்ஸ் வீரர்கள். ஆனால், கேப்டன் திராவிட் 10 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அவர் அடிந்த பந்தை ஒடாகோ வீரர் பியர்டு அபாரமாக கேட்ச் செய்தார்.

திராவிட்டைத் தொடர்ந்து சம்சன் (5), வாட்சன் (2), பின்னி (1) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினார்.

ரஹானே நிதானம்: இதனிடையே, தொடக்க வீரராகக் களமிறங்கிய இளம் வீரர் அஜிங்யா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. 12.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற நிலையில் ராயல்ஸ் இருந்தது. பின்னர் களமிறங்கிய ஹோட்ஜ் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்.

ஹோட்ஜ் விளாசல்: சிறப்பாக ஆடி வந்த ரஹானே 44 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் கண்டார். ஆனால், 52 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை ஒடாகோ பந்து வீச்சாளர் நீஷாம் வெளியேற்றினார்.

இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்த ஹோட்ஜ், அதிரடியாக விளையாடினார். இதனால், வெற்றியை நோக்கி ராயல்ஸ் பயணித்தது. இறுதியில் 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காத ஹோட்ஜ் 52 ரன்கள் எடுத்தார். 23 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். ஒடாகோ தரப்பில் நீஷாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ராயல்ஸ் வீரர் ராஜீவ் சுக்லா பெற்றார்.

மும்பைக்கு வாய்ப்பு: புள்ளிகள் பட்டியலில் ஒடாகோ அணி 10 புள்ளிகளைப் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை அணி 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

ஒடாகோ அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் மும்பை அணியின் அரையிறுதிக் கனவு முற்றிலும் கலைந்திருக்கும். ஆனால், இந்த ஆட்டத்தின் முடிவு, மும்பையின் அரையிறுதிக் கனவை உயிர்ப்பித்தது.

புதன்கிழமை நடைபெறும் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டும், அந்த அணியின் அரையிறுதிக் கனவு மெய்யாகும்.

You may also like ...

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர

புதிய தொகுப்புகள்