இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான பியல் நந்தன திஸாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்துக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கவேண்டிய சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான தொகையை தனியார் வங்கி கணக்கொன்றுக்கு மாற்றியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரின் தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைத்திற்காக கிடைக்கவேண்டிய தொகையில் முதல் தவணையை தனியார் வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளது.
அதன்பின்னரே, தென்னாபிரிக்க தொடரின்போதும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்துற்கான பணம் தனியார் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டமை உறுதியாகியுள்ளது.
பியல் நந்தன திசாநாயக்க நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.