மிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை

உயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்டை அணிந்து கொள்வார்கள் எனபது எல்லோரும் அறிந்த பொதுவான ஒன்றே. சில நேரங்களில் அது வீண் முயற்சி என்று நினைக்கும் அளவுக்கு காலை வாரி விடும். ஆனால் இங்கு வெறும் 35 சதுர அடி அளவுடைய பாராசூட் மூலம் பத்திரமாக குதித்து, பார்த்தவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார் வீரர் ஒருவர்.

வெனிசுலா நாட்டு பாராசூட் வீரரான எர்னஸ்டோ கெயின்சா என்பவர், உயரமான பகுதிகளில் இருந்து குதிக்கும் ‘ஸ்கைடைவிங்’கில் தேர்ச்சி பெற்றவராக விளங்கி வருகிறார். கடந்த வாரம் துபாய் கிளப்பில் நடந்த ‘ஸ்கைடைவிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சாதாரண

‘பெட்ஷீட்’ அளவே உள்ள பாராசூட் மூலம் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கினார்.

வெறும் 3½ நிமிடங்களில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. அந்த வகையில் கடந்த 2006–ம் ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த லைகி கானி என்பவர் பயன்படுத்திய பாராசூட்டே இதுவரை சாதனையாக இருந்தது. அதைவிட எர்னஸ்டோ கெயின்சா பயன்படுத்திய பாராசூட், 0.18 சதுர மீட்டர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்தவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் இது ஒரு ஆச்சரியமான செய்தி தான்.

You may also like ...

உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டிய

சாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்

புதிய தொகுப்புகள்