48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார்.

இதையடுத்து அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்தது.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணியாளர்கள் மளமளவென வேலையைத் துவங்கி குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர்.

முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 பணியாளர்கள், டெக்னீஷியன்கள், என்ஜினியர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்!

தற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக

கல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..!

நம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க

புதிய தொகுப்புகள்