இறந்த' குழந்தை உயிர் பெற்றது

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில்  கடந்த மாதம் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கு சுவாசக் கோளாறு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

தொடர்ந்து தீவிர மருத்துவப் பிரிவில் வைத்து மருத்துவம் அளிக்கப்பட்டும், கடந்த 12ம் தேதி அக்குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு இறப்புச் சான்றிதழும் அளிக்கப் பட்டது. குழந்தையின் உடலைப் பெற்றுக் கொண்ட  பெற்றோர், உரிய சடங்குகள் செய்து குழந்தையைப் புதைக்க ஏற்பாடுகள் செய்தபோது திடீரென்று  குழந்தையின் உடல் அசைந்தது. இதனைக் கண்ணுற்ற உறவினர்கள், உடனடியாகக் குழந்தையை அன்ஹுய் மாகாண அரசு குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு உயிர் இருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், உயிருடன் உள்ள குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் தந்த மருத்துவரும், தாதிப் பெண்ணும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


You may also like ...

மெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி!

இன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்

World Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத

புதிய தொகுப்புகள்