135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை

இங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடலில் நீந்தி ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் கிளவுஸ்டர்ஷெயர் பகுதியில் உள்ள லெக்காம்டான் என்ற இடத்தை சேர்ந்தவர் சீன் கான்வே (32). இவர் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் எண்ட் என்ற இடத்தில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கினார்.

சுமார் 4 மாதங்கள் மிகவும் குளிரான இங்கிலாந்து கடல் பகுதியில் நீந்தி சென்று இங்கிலாந்தின் மறுமுனையில் சுமார் 1450 கிமீ தொலைவில் இருக்கும் ஜான் ஓ க்ரோட்ஸ் என்ற துறைமுகத்தை நேற்று வந்தடைந்தார். இதற்காக இவர் எடுத்து கொண்ட காலம் 135 நாட்கள்.

கடலில் நீந்தி வரும் போது, ஜெல்லி மீன்களின் தாக்குதல், கடல் நோய் பாதிப்பு, குளிர் என எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இதுகுறித்து சீன் கான்வே கூறுகையில், இதற்கு முன்பு இதே பகுதியை சைக்கிளிலும், நடந்து சென்றும் பலர் இந்த சாதனையை செய்துள்ளனர். ஆனால் முதல் முறையாக இந்த பகுதியை கடலில் நீந்தி கடந்துள்ளேன் என்கிறார்.

ஆனால், இவரது சாதனையை கின்னஸ் புத்தகம் பதிவு செய்ய மறுத்து விட்டது. 90 நாட்கள் கடலில் நீந்தி சென்ற அவர் சில மணி நேரம் மோசமான வானிலை காரணமாக கடலுக்கு வெளியே செலவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பான நீச்சல் உடையும், காலில் எளிதில் நீந்தி செல்வதற்கான நீச்சல் ஷூவும் அணிந்திருந்தார் என்ற காரணத்துக்காக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீன் கான்வே செய்தது சாதனைதான் என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

You may also like ...

போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி

IPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB!

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள

புதிய தொகுப்புகள்