ஊதா பளிங்குகளால் பிரசித்தி பெற்ற நாமல் பூங்காவை அடுத்த ஆண்டு தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப் போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய மரபுரிமைகள் குழுவின் அனுமதி கோரவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தேசிய நாமல் பூங்காவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய ராஹூல தேரரின் அழைப்பை ஏற்று, இராஜாங்க அமைச்சர் பூங்காவிற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தில் பூங்காவை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
>அரசாங்க தகவல் திணைக்களம்
(Date: 22.12.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.