இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு அடிமுதுகில் வலி அதிகமாக இருக்கும். அதிலும், தொடர்ந்து அதிக தூரம் வண்டியிலேயே பயணம் செய்ய நேரிடும்போது கை, கால், மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தசைகள் இறுகி வலி ஏற்படும்.

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப்பது  போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்: