கையில் தொங்கும் சதையை எப்படி குறைக்கலாம்?

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சீராக வைத்துக் கொள்வதற்கென்று தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது.

அந்த வகையில் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

மேலும் கையில் தொங்கும் சதையை குறைக்க சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி எப்படி குறைக்கலாம் என்பதைப் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

கையில் தொங்கும் சதையை குறைக்க உதவும் இயற்கை முறைகள்

🌞 வீட்டு சமையல் அறையில் உள்ள கல் உப்பை நீர் கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

🌞 தசை அதிகமாக தொங்கும் இடத்தில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்யை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை ஒருவாரத்திற்கு 3-4 முறை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

🌞 இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கைகளில் தடவி, ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.

🌞 பட்டர் ஃபுரூட் பழத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு கலந்து, கைகளில் உள்ள தொங்கும் தசைகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

🌞 2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை, 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, அதிக தசை உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து, நீரில் கழுவ வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

🌞 2 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை தசை தொங்கும் கைகளில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்துவிடுங்கள். இதை வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால் போதும் நல்ல மாற்றம் உண்டாகும்.

You may also like ...

மின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய

முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்?

அமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி

புதிய தொகுப்புகள்