ஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம்

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன .ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால்நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை, வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்குவீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .

ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .

தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .
சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .

You may also like ...

படர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்

உடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம

வியர்வை துர்நாற்றம் தாங்கவில்லையா? இதோ எளிய டிப்ஸ்

வெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்

புதிய தொகுப்புகள்