கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீன், கால்சியம், விட்டமின் A, D, E போன்ற ஆரோக்கியமான பல சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேரட்டை பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான பலன்களை பெறலாம்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் நன்மைகள்

 • பச்சையாக கேரட் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கலாம்.
 • கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், குடல் புண்கள் மற்றும் பித்த கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
 • பாதியளவு வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 • கேரட்டை பச்சையாக அரைத்து ஜூஸ் செய்து குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூலம், வயிற்றுவலி போன்றவை குணமாகும்.
 • வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவர்கள் கேரட் ஜுஸை தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
 • சருமம் வறண்டு, அரிப்பு ஏற்பட்டால் உடனே பச்சை கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
 • கேரட் இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
 • கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
 • கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்ற பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும்.
 • ரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து, புற்றுநோய் நோய், மாலைக்கண் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது.
 • கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்துகள் கேரட்டில் அதிகம் உள்ளது. மேலும் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை மேம்பட்டு முகம் பொலிவு பெறும்.

You may also like ...

தூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா?

உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான

உலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா?

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்

புதிய தொகுப்புகள்