×

Error

There was a problem loading image self_balancing_motor_002.jpg

கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளி (Coleus Aromaticus) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும், காரத்தன்மையும், வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

கற்பூரவள்ளி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

கற்பூரவள்ளி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காய்ச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கு இதன் சாறை கண் மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக்கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

You may also like ...

கல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள

குன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்!

ஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி

புதிய தொகுப்புகள்