முந்திரி பழம் தரும் பயன்கள்

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது.

ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது.

You may also like ...

தங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே!

பெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க

கல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள

குன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல

புதிய தொகுப்புகள்