×

Error

There was a problem loading image ronaldo.jpg

புற்றுநோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை

நம் உணவில் சேர்க்கும் பலவும் நமது ஆரோக்கியம் காப்பவை. அதற்கு ஓர் உதாரணம், கறிவேப்பிலை. இது உணவுக்கு மணம் கொடுக்க மட்டுமல்ல, ஆரோக்கியம் காக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவை உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இவைதான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகின்றன.

பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகின்றன. கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சயன்டிஸ்ட் ஆப்சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.

இந்நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையவை மட்டுமல்ல, அவை பல மருத்துவ குணங்களை கொண்டவை என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனத் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக், கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக இயங்குகிறது என்கிறார்.

இது புற்றுநோய், இதய நோய் அபாயங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி பெருகுகிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல், இதயம், கண் நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள விவசாய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.

கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்துச் சாப்பிட்டால் நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது மேற்கண்ட ஆஸ்திரேலிய நிறுவனம். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்கப் பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தனர்.

அதில், கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன என்பது தெரியவந்தது. மேலும் 'பிரிரேடிக்கல்ஸ்' நிலை ஏற்படுவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கப்படுகிறது. செல்களிலுள்ள புரோட்டீன் அழிகிறது. விளைவு, கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிக்கும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலைகளையும், மாலையில் 10 இலைகளையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமானது குறைக்கப்படும், சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகிறது.

கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். இனிமேலாவது, கறிவேப்பிலையை சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிந்துவிடாமல் அதையும் குடலுக்கு அனுப்புவோம்!

You may also like ...

புற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்!

ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண

தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் ச

புதிய தொகுப்புகள்